ஒரு வரிச் செய்திகள்

 


            ஒரு வரி செய்திகள் 

👉அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைய தொடர்புக்கான 60 செயற்கைக்கோள்களை பால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.


👉நாடு முழுவதும் கொரோனா சிகிச்சை தொடர் பாக மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு சலுகைகள் அறிவிப்பு

பொது மக்கள், வணிகம் தொழில்துறையினர் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம்


ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்👉மியான்மர் வன்முறை உள்நாட்டு போருக்கு வழி வகுக்கும் என்று ஐ.நா.வுக்கான சீன தூதர் ஜாங் ஜுன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


👉இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை பரிசோதனைகளை மேற்கொள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.👉மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, தொடர்ந்து 3வது முறையாக முதல்-மந்திரியாக மம்தா பானர்ஜி இன்று பதவியேற்கிறார்.👉மத்திய அரசின் துறைகளைச் சார்ந்த அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியாற்றும் நடைமுறை மே மாத இறுதி வரை தொடரும் என்று மத்திய பணியாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.👉தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59லிருந்து 60ஆக உயர்த்தி ஆணை👉திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நாளை முதல் வரும் 15ஆம் தேதி வரை இரு மார்க்கங்களிலும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.👉சைபர் குற்றங்களை கண்டுபிடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என போலீஸ் அதிகாரிகளிடம் சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.