அரசு மருத்துவமனைகளில் இலவச உணவு அதிரடி திட்டம் அமைச்சர் பிகே சேகர்பாபு

 


                சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 24 மணி நேர இலவச உணவு சேவையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.                          

 செய்தியாளர்களுக்கு அளித்த பெட்டியில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேலையும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

2 அலை கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள சென்னையில் முக்கிய திட்டம் ஒன்றை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் வகையில் 24 மணி நேரமும் உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு இன்று தொடங்கி வைத்தார். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன் அடைவார்கள்.

அதிமுக அரசு கொண்டுவந்த திட்டம் என்றாலும் மக்கள் பசி தீர்க்க  முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் அம்மா உணவகங்கள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. கும்பகோணம் தொகுதி திமுக எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் கொரோனா பொது முடக்கத்தில் அம்மா உணவகத்தில் மக்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்குவதற்காக நகராட்சி நிர்வாகத்திடம் நிதி அளித்துள்ளார்.

அன்பழகன் எம்எல்ஏ இந்த செயல்  பிற அமைச்சர்கள், எம்எல்ஏக்களையும் இந்தப் பணியில் ஈடுபடுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஈஷா யோகா மையம் மீது நடவடிக்கை என பேசப்படுகிறதே ?

அமைச்சர் சேகர் பாபு : யார் தவறு செய்தாலும் திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பிகே சேகர்பாபு கூறினார்.