இரு வரி செய்திகள்

 


தெலுங்கு நடிகர் மோகன் பாபுவை சந்தித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - புகைப்படங்களை வெளியிட்ட மோகன் பாபு மகன் விஷ்ணு மஞ்சு.



கடலூரில் ஆக்சிஜன் மாஸ்க்/கருவி அகற்றப்பட்டதால் நோயாளி ராஜா என்பவர் உயிரிழப்பு என குற்றம்சாட்டப்பட்ட விவகாரம்: முழுமையான விசாரணைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு.




ஒரே கல்வியாண்டில் இரட்டை பட்டப்படிப்பு அங்கீகரிக்க முடியாது


சென்னை உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு


இரட்டை பட்டப்படிப்பை அனுமதிப்பது தொடர்பாக மனித வள மேம்பாட்டு துறைக்கு பரிந்துரை


சென்னை உயர்நீதிமன்றத்தில் யு.ஜி.சி. தகவல்


மதுரையில் கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்


திருச்சி | ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்


7 பேர் - விடுதலை குறித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் டி.ஆர்.பாலு வழங்கினார்.



உணர்ச்சிவசப்பட்டார் பிரதமர் மோடி


நாடு முழுவதிலும் உள்ள மருத்துவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனாவிற்கு நாம் நிறைய பேரை இழந்து வருகிறோம் அது எனக்கு வருத்தமாக இருக்கிறது எனக் கூறி சற்று உணர்ச்சி வசப்பட்டார்



உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க இணையதள சேவையை வனத்துறை அமைச்சர்  ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.



                நிருபர் கார்த்திக்