தமிழக ஊரடங்கு - கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

 



            *தமிழக ஊரடங்கு - கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு* 


வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும் 


காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நாளை முதல் செயல்பட அனுமதி இல்லை  


தனியாக செயல்படும் மளிகை, காய்கறிகள், இறைச்சி கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் இயங்க அனுமதி; பிற கடைகள் திறக்க தடை 


ATM, பெட்ரோல் பங்குகள், மெடிக்கல், நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல திறக்க அனுமதி




பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி, மளிகை போன்றவற்றை வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்கவும்; அதிக தூரம் பயணிக்க முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள்


E-Commerce நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி


ஏற்கனவே அறிவித்துள்ளபடி ஞாயிறு முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் - தமிழக அரசு


திருமணம், முக்கிய உறவினர்கள் இறப்பு, மருத்துவ சிகிச்சை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பதிவு வரும் 17ம் தேதி முதல் கட்டாயம்


நாளை முதல் டீக்கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் இயங்க அனுமதி இல்லை