திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்


சென்னை: 133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்துடன் மு.க.ஸ்டாலின் கிண்டி ஆளுநர் மாளிகை புறப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு மு.க. ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.


இன்று (05-05-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களை, ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.


அதுபோது, கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன், கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.