இன்றைய ராசிபலன்

 


              இன்றைய ராசிபலன்

 (28-05-2021)                              


வெள்ளிக்கிழமை ராசிபலன்*


 மேஷம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வங்கி சேமிப்பு உயரும்..



 ரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு *சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும்*. சுபகாரிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களைத் தவிர்த்து விடவும்.



 மிதுனம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீண் செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை தீரும். தொழில் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். வேலை செய்யும் இடத்தில் திறமைகள் பாராட்டப்படும்.



 கடகம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். வேலையில் பணிசுமை குறையும். வங்கி கடன் வாங்குவீர்கள்..



 சிம்மம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாகும். வியாபார சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வேலையில் உள்ள பிரச்சினைகள் சற்று குறையும். வருமானம் இரட்டிப்பாகும்.



 கன்னி

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் சிறு மன சங்கடங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். வேலையில் இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடி வரும்.



 துலாம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் ஏற்படும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் தேடி வரும். வெளி வட்டார நட்பு நன்றாக இருக்கும். பண வரவு வரும் கடன் பிரச்சினைகள் தீரும்.



 விருச்சிகம்

இன்று உங்கள் உடல்நிலையில் இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.



 தனுசு

இன்று வீட்டில் இருந்து வேலை செய்தாலும் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் அதிகரிக்கும்.



 மகரம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். வண்டி வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்கள் விற்பனையில் லாபம் கிடைக்கும். வங்கி சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.



 கும்பம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலைக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.



 மீனம்

நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். பண வருமானம் வரும் கடன் பிரச்சினை குறையும். நோய் பாதிப்புகள் நீங்கி உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.


                              *சுபம்*


         வடிவமைப்பு திருமதி மோகனா செல்வராஜ்