👤திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி
-மு.க.ஸ்டாலின் அறிக்கை
👤சென்னை: முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக, காங்கிரஸ் இணைந்து தமிழக மக்களின் கனவுகளை நினைவாக்க பாடுபடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
👤கொரோனாவை ஒழிக்க இணைந்து பாடுபடுவோம் என குறிப்பிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதற்காக மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தேசிய முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கும், கொரோனோ தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கும் ஒன்றிணைந்து செயல்படுவோம் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
👤திமுக வெற்றி மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து.
👤முதலமைச்சராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினை சந்தித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
👤திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து
👤கருணாநிதி நினைவிடம் அலங்கரிப்பு..!*
*திமுக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.
👤தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் காவல்துறை டிஜிபி திரிபாதி சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பத்தாண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கிறது மு க ஸ்டாலின் பொறுப்பேற்று முதல்முறையாக வெற்றி கண்டு தமிழகத்தின் முதல்வர் ஆகிறார்.