கொரோனா தொற்றால் மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி

 


    கொரோனா தொற்றாள் மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி.. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர் கார்த்திகா மரணம்


சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணியான(29) வயது மருத்துவர் கார்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்


மதுரையில் ஆரம்ப சுகாதார நிலை மருத்துவரான 30 வயதான சண்முகப்ரியா சில தினங்களுக்கு முன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மீண்டும்  அடுத்தாக ஒரு கர்ப்பிணி மருத்துவர் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.


திருவண்ணாமலை மாவட்டம் போளூர், வசந்தம் நகரில் வசிப்பவர் ராமலிங்கம்.  அவருடைய மனைவி மணியம்மாள். ஓய்வு பெற்ற அரசு மருத்துவர். அவர்களுடைய  மகள் கார்த்திகா(29). மருத்துவரான இவர், தனது இல்லத்திலேயே கிளினிக் நடத்தி வந்துள்ளார். அவறுக்கும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் கார்த்திக் என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.


நிறைமாத கர்ப்பிணியான கார்த்திகாவுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


 மேலும் அவர், வீட்டிலேயே தன்னை       தனிமைப்படுத்திக் கொண்டு மருந்து ,மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார்.


 மேலும், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உடல்நிலை  முன்னேற்றம் ஏற்படவில்லை. அதனால் , மேல்சிகிச்சைக்காக,                


சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


           நிருபர், மணிவண்ணன்