மருத்துவப் பயிற்சி மாணவர்களுக்கு பணி வழங்கப்படும் சென்னை மாநகராட்சி

 


😡சென்னையில் 2அலைஅதிகரிக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.பயிற்சி மருத்துவர் பணிக்கு ரூ.40,000 மாத சம்பளத்தில் 3 மாதம் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்படும்.


அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தற்காலிக அடிப்படையில் 300 பயிற்சி மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்ட உள்ளது தமிழக அரசு.

      

 🔴 கொரோனா முன்களப்பணியில் இறந்த வருவாய் துறை அலுவலர்கள் 9 பேரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக வழங்க உத்தரவு


முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழக அரசு உத்தரவு


❤தமிழக அமைச்சர்களிலேயே அதிக சொத்துடையவர் ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. காந்தி என்பது அவர் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. மிகக் குறைந்த சொத்துடைய அமைச்சர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பத்மநாபபுரம் எம்.எல்.ஏ.மனோ தங்கராஜ். இது போன்ற பல சுவாரஸ்யமான விடயங்கள் அமைச்சர்களின் பிரமாணப்பத்திரங்கள் மூலம் தெரியவந்துள்ளன


❤பிராமணர் சமூகத்திற்கு தமிழக அரசியலில் எதிர்காலம் கிடையாது.  இது திராவிட நாடு. கமல்ஹாசன் தோல்விக்கு பாதிக்காரணம் அவர் சாதியும்தான்” சாருஹாசன் சிறப்பு பேட்டி


😡தொடர் உற்பத்தி ஆலைகள், அத்தியாவசிய உற்பத்தி ஆலைகளின் சிக்கல்களை களைய சேவை மையம் அமைப்பு

சென்னையில் உள்ள தொழில் வழிகாட்டி மைய அலுவலகத்தில் சேவை மையம் இயங்கும் 


சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியமாக ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவிப்பு


   தமிழக அரசு


ஆட்டோ, டாக்சிக்கு சாலை வரிக் கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்