இன்று ஒரு தகவல்

 


                சமையல் குறிப்பு 


        கோடைக்கு இதம் தரும் தயிர் !!


👉 தயிர் என்பது ஆரோக்கியமான உணவு பொருளாகும்.


 இந்த கோடைகாலத்தில் தயிர் சாப்பிடுவது நமது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. 


தயிரை சாப்பிடுவதால் உடல் சு டு தணிவதோடு, செரிமான சக்தியும் அதிகரிக்கும். 


மேலும் தயிரில் உடல்நலப் பயன்கள் பல அடங்கியுள்ளதால், இதனை பல விதமாக வீட்டு சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தலாம். தயிரின் மருத்துவ பயன்களைப் பற்றி இங்கு காண்போம்.


👉 தயிர் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பார்கள். 


ஆனால் தயிரிலுள்ள அதிக புரதச்சத்து காரணமாக, உடல் எடை குறையவும் நிறைய வாய்ப்புள்ளது.


👉 தயிர் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 


👉 தயிர் உட்கொள்வது பற்களுக்கும், எலும்புகளுக்கும் நல்லதாகும்.


 எலும்புத்துளை நோய் போன்ற சில பிரச்சனைகளை தவிர்க்க, சீரான முறையில் தயிரை எடுத்துக்கொள்வது நல்லது.




👉 சளி, இருமல் இருப்பவர்கள் இரவு நேரத்தில் தயிரை சாப்பிடக்கூடாது.


.ஏனெனில் தயிரை இரவில் உட்கொள்வதால் சளியின் வளர்ச்சி அதிமாகி உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே இரவில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


👉 தயிரை மண் பாத்திரத்தில் வைப்பதால் வெயில் காலத்திலும் அது புளிக்காமல் சுவையுடன் இருக்கும். 


அதனுடன் இஞ்சி, பெருங்காயம், சீரகம் தாளித்து தண்ணீர் சேர்த்து கடைந்து குடித்தால் செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, உடல் சு ட்டை குறைத்து குளிர்ச்சியை உண்டாக்கும்.


👉 புரதச்சத்து, கால்சியம், வைட்டமின் டீ6 மற்றும் வைட்டமின் டீ12 போன்ற ஊட்டச்சத்துகள் தயிரில் நிறைந்துள்ளது. 


பாலை விட, அதிகமான சத்துகள் தயிரிலிருந்து கிடைக்கின்றன.


👉 மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு தயிர் சிறந்த மருந்தாகும். 


உணவை ஜீரணிக்க தயிர் உதவுவதோடு மட்டுமல்லாமல் வயிற்றின் வாயுத்தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது.


👉 மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்க தயிர் உதவுகிறது. 


மேலும் இது மனதை சாந்தப்படுத்தி, உடலுக்கு குளிர்ச்சியான உணர்வை உண்டாக்கிறது.


👉 மூல நோயால் அவதிப்படுபவர்கள் தயிர் சாதத்துடன் இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலனைத் தரும். 


 எனவே நம்முடைய தினசரி வாழ்க்கையில் தயிரை ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்துவது உடலுக்கு மிகவும் நல்லதாகும். 


அன்புடன்

கார்த்திகா