இன்றைய ராசிபலன்

             இன்றைய ராசிபலன்


(24-05-2021)


மேஷம்


சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். சந்திரன் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. இன்று உங்களுக்கு மன அமைதி அதிகரிக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். திருமண சுப காரியம் தொடர்பாக வரன் வீட்டாரிடம் பேச நல்ல நாள் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பயணங்களைத் தவிர்க்கவும். வருமானம் அதிகரிக்கும் கடன் சுமை குறையும். நோய்கள் நீங்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் குறையும்.ரிஷபம்


சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் வேலை செய்யும் இடத்தில் சுறுசுறுப்புடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். . திடீர் தனவரவு ஏற்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மிதுனம்


சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு பாதிப்புகள் வரலாம். ஆடம்பர செலவுகளால் பணநெருக்கடி உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சற்று மந்தநிலை ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளை தள்ளி வைக்கவும். கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் வரலாம். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.கடகம்


சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும்.  குடும்பத்தில் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.சிம்மம்


சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். கடன்கள் சற்று குறையும். வங்கி சேமிப்பு உயரும்.கன்னி


சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு 2ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பிள்ளைகளால் பெருமை சேரும்.  தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் நஷ்டம் இருக்காது. மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பயணங்களைத் தவிர்த்து விடவும்.


துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு தாராள பணவரவு உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வியாபார ரீதியாக உங்கள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். திருமண சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். விருச்சிகம்


சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை உண்டாகும். வெளியில் செல்ல வேண்டாம் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வீட்டில் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடுகள் மனதிற்கு நிம்மதியை அளிக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை கொடுக்கும்.தனுசு


சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.மகரம்


சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தேர்வுக்காக தயாராகும் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும், வேலையில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.கும்பம்


சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். கடந்த 2 நாட்களாக இருந்த மன உளைச்சல்கள் நீங்கும். நண்பர்கள் செய்யும் எதிர்பாராத உதவிகள் மனமகிழ்ச்சியை அளிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமையோடு செயல்படுவார்கள். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.மீனம்


சந்திரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். வெளியிலிருந்து வர வேண்டிய பணம் தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வீட்டை விட்டு வெளியே செல்வதைத் விட்டுவிடுங்கள் 


         வடிவமைப்பு திருமதி மோகனா செல்வராஜ்