செய்திகள்

 செய்திகள் 👉 ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


👉 வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.


👉 புதுச்சேரியில் ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை, என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


👉 இந்தியாவில் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளை சமாளிக்க முடியாமல் மருத்துவமனைகளே தவிர்த்து வரக்கூடிய நிலையில், காசியாபாத்தில் குருத்வாரா-வினர் நோயாளிகளை நாடி ஆக்சிஜன் விநியோகம் செய்கின்றனர்.


👉 தேனி மாவட்டத்தில் மல்லிக்கைபு  சாகுபடிக்கு தேவையான நாற்றுகளை தோட்டக்கலைத்துறையினர் வினியோகம் செய்ய விவசாயிகள் கோரியுள்ளனர்.

👉 22 ஆண்டுகளுக்குப் பிறகு 29-ந்தேதி நடக்கும் வைத்தீஸ்வரன் கோவில் குடமுழுக்கு நடை பெற்றது

👉 மத்திய அரசால் கொடுக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 17 மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளது.


👉 பிளஸ்-2 மாணவர்களுக்கு ஆன்லைனில் திருப்புதல் பயிற்சி வழங்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


👉 மறைந்த உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் சந்தானகவுடருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, உச்சநீதிமன்றத்தின் இன்றைய அலுவல்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 பட்டியலிடப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவித்துள்ளார்.


👉 தமிழக - கர்நாடக மாநிலத்தின் பிரதான நுழைவு வாயிலாக இருக்கும் ஓசுர் அத்திப்பள்ளி பகுதியில் தமிழக சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இ-பாஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.


👉 அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 93வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த ஒலி அமைப்பு ஆகிய விருதுகளை சவுண்ட் ஆஃப் மெட்டல் திரைப்படம் வென்றுள்ளது.


👉 ஈரோடு மாவட்டம் அந்தியுர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1.25 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.


👉 ஐபிஎல் தொடரில் இருந்து முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விலகி வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.