இன்று ஒரு ஆன்மீகத் தகவல்

ஆன்மீக தகவல் 


தேனுபுரீஸ்வரர் கோவில், பட்டீச்சரம்

பட்டீச்சரம் பட்டீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. காமதேனுவின் புதல்வியான பட்டி பூசித்த தலமென்பதும் சம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தல் அருளிய தலமென்பதும் தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 23ஆவது சிவத்தலமாகும்.

பராசக்தி தனித்து தவம் செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்து இறைவனை பூஜித்து வர இறைவன் பராசக்தியின் தவத்திற்கு உவந்து தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்த சிறப்புடையது இத்தலம்.

தேவி வனம், சக்திவனம் என்ற திருப்பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு.

இத்தலத்தை நோக்கி சைவ செம்மல் திருஞானசம்பந்தர் நடந்து வந்த போது வெயில் கடுமையாக இருந்தது. 

இந்த வெம்மைக்கு மாற்றாக பட்டீஸ்வரர் முத்து பந்தலை தமது அடியார்க்கு அளித்த திருத்தலம் இதுவேயாகும்.

  • ஞானசம்பந்தர் வரும் காட்சியைக் காண இறைவன் நந்தியை விலகியிருக்குமாறு சொன்னதால், இங்குள்ள நந்திகள் சந்நிதியிலிருந்து விலகியே உள்ளன.

ஐந்து கோபுரங்களையுடைய சிவாலயமாக திகழந்தாலும் துர்க்கைதான் இத்தலத்தில் சிறப்புடன் விளங்குகிறாள்.

 வடபுறவாயிலில் நுழைந்ததும் நமக்கு முதலில் காட்சியளிப்பது துர்க்காதேவிதான். ஆறடி உயரத்தில் கம்பீரமாக நின்ற கோலத்தில் தனிக்கோயில் கொண்டு விளங்குகிறாள்.

இவ்வூரார், கோட்டை வாயில் துர்க்கை என்றே அழைக்கின்றனர். இத்துர்க்கையம்மன் மிகவும் சக்திவாய்ந்தவள்.

 திருமணமாகாத ஆண்களும், பெண்களும், நோயினால் பீடிக்கப்பட்டவர்களும், குடும்ப துன்பத்தில் தவிப்பவர்களும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இக்கோயிலின் ஞான வாவியில் நீராடி அம்மனை வழிபட்டு குறை நீங்கி நலமடைவர்.

துன்பம் போக்கும் பட்டீஸ்வரம்  துர்க்கை அம்மன் பற்றிய தகவல்

 ஆதிபராசக்தியாய் அனைத்தும் கைவரச் செய்பவள் தான் துர்கை அம்மன். 

 பட்டீஸ்வரத்தில் உள்ள  துர்க்கை அம்மனை வழிபட்டால் துன்பங்கள் அனைத்து நீங்கும் என்பது ஐதீகம். 

 ஸ்ரீ துர்க்கையம்மன் திருவடிகளே துணை 

 ஆதிபராசக்தியாய் அனைத்தும் கைவரச் செய்பவள் தான் துர்கை அம்மன். 

 முன்னொரு காலத்தில் பார்வதி தேவி, ஞானம் பெறுவதற்காக சிவனை நோக்கித் தவம் இயற்றத் தொடங்கினாள்.

 காமதேனுவின் நான்கு மகள்களில் முதல் மகளான பட்டி, உதவிகள் புரிவதற்காக இங்கு வந்து உதித்தாள்.

களிமண்ணில் அழகான சிவலிங்கத்தை உருவாக்கினாள் பட்டி. பின்னர் தனது கொம்புகளினால் மண்ணைத் தோண்டி குளம் அமைத்தாள்.

 ஈசனுக்கு பார்வதி அபிஷேகம் செய்ய ஏதுவாக புனித நதிகளான கங்கையையும், காவிரியையும் தனது ஆத்ம பலத்தால் இக்குளத்துக்கு வரவழைத்தாள்.

தானே பால் சுரந்து பாலாபிஷேகத்துக்கும் வழி வகுத்தாள் பட்டி.

 இதனால் மனம் மகிழ்ந்த ஈசன், பட்டீஸ்வரன் என்ற பெயர் ஏற்று இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கத் தொடங்கினான்.

 அதுமுதல் பட்டீஸ்வரம் என்றே இவ்வூருக்குப் பெயர்.

 இவ்வூரில்தான் துர்க்கை அருள்பாலித்து வருகிறாள்.

ஆறடி உயரத்தில், அழகாக புடவை கட்டி, எலுமிச்சை மற்றும் ரோஜா மாலை அணிந்து காட்சி அளிக்கிறாள் . மூன்று கண்களைக் கொண்டவள்.

 எட்டுக் கரங்களுடன், எருமை முகமுடைய மகிஷாசுரனைக் காலில் மிதித்து, நிமிர்ந்து நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறாள். 

எட்டு கரங்களில் ஒன்றை அபயஹஸ்தமாகவும், மற்றொன்றை இடை மீது வைத்து கம்பீரமாகவும் காட்சி அளிக்கிறாள்.

பிற ஆறு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டு சாந்தமாக போர் முடித்த கோலத்தில் காணக் கிடைக்கிறாள்.

இடப்பக்கம் நோக்கியுள்ள வாகன சிம்மத்தின் ரூபிணியாக விளங்குகிறாள்.

 துர்க்கை இங்கு சாந்த சொரூபிணியாக இருப்பதை அவளது புன்னகை தவழும் முகமும், வலப்புறம் திரும்பியுள்ள சிம்ம வாகன முகமும் நிரூபிக்கிறது.

 பக்தர்களை வரவேற்கும் கோலத்தில் வெற்றி வாகை சூடிய நிலையில் இருக்கிறாள்.

ராகுவிற்குரிய அதிதேவதை துர்க்கை. ராகு பெயர்ச்சியால் சிரமப்படும் ராசியினர் இந்த போற்றியை தினமும் சொல்லி வந்தால் சர்வநலனும் உண்டாகும்.

அமைவிடம் 

கும்பகோணத்திற்கு தென்மேற்கில் 8 கி.மீட்டர் தூரத்தில் பட்டீஸ்வரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. 

ஓம் நமசிவாய

 *மோகனா செல்வராஜ்*