ஒரு வரிச் செய்திகள்

 


        👉முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்று சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும்" - மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

 காலை 7 முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிப்பு

விம்கோ நகர் - விமான நிலையம் இடையே ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயங்கும்"


👉சேலம் மாவட்டம் எடப்பாடியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேர் கைது


👉ராசிபுரம்: கால் ஒடிந்த இருவரை 20 நிமிடங்கள் மழையில் விட்டுச்சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள்


👉தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பிளஸ் 2 தேர்வு ஒத்திவைப்பு - புதுச்சேரி அரசு அறிவிப்பு


👉ஒரே நாடு' என்ற உணர்வுடன் பணியாற்றுவோம்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு


👉மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ இலவச தானியங்கள் வழங்க பிரதமர் மோடி உத்தரவு


👉தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆலோசனை*

கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசித்த விவரங்கள் பற்றி முதல்வர் பழனிசாமியிடம் எடுத்துரைப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.


👉பரிசோதனை இல்லை, மருந்து இல்லை, ஆக்ஸிஜன் இல்லை, ஆனால் 3,408 கோடிக்கு டெண்டர்’ - ராகுல்


👉மே 2க்குப் பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது: திமுகவினருக்கு  மு.க.ஸ்டாலின் கடிதம்


 👉திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீதான அவதூறு வழக்கிற்கு தடை

வழக்கை ரத்து செய்யக்கோரிய ஆர்.எஸ்.பாரதியின் மனு மீது உயர்நீதிமன்றம் உத்தரவு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக வழக்கு


👉அரியலூர்: பிறந்த இரட்டை குழந்தைகளை மண்ணில் புதைத்த கொடூரம் - உடலை தோண்டி போலீசார் விசாரணை


👉கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு


👉கொரோனா பரவலை சமாளிக்க இந்தியாவின் தேவைக்கு ஏற்ப உதவ தயார் - சீனா


👉சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே  நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு மகன் மறுத்ததால் விரக்தியடைந்த தாய், தந்தை இருவரும் தூக்கிட்டு தற்கொலை


👉ஆந்திராவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் - முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி


👉ஞாயிறு முழு ஊரடங்கு அன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள 40 மசூதிகளும் மூடப்படும் என அறிவிப்பு!


👉வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ளும் #முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: சென்னை மாநகராட்சி


👉முழு ஊரடங்கு நாட்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது - தெற்கு ரயில்வே


👉லிபியா அருகே அகதிகள் சென்ற படகு கடல் கொந்தளிப்பால் தண்ணீரில் மூழ்கியது - நூற்றுக்‍கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்‍கக்கூடும் என அச்சம்


                      நிருபர், கார்த்திக்