இந்திய மகளிர் கால்பந்து அணியின் கேப்டனாக தமிழக காவல்துறையில் பணியாற்றிவரும் கடலூரை சேர்ந்த காவல் துணை ஆய்வாளர் இந்துமதி கதிரேசன் அவர்கள் தேர்வாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது.
தமிழகத்திற்கு பெருமை சேர்த்திடும் அவரது வெற்றிப்பயணம் தொடர எனது நல்வாழ்த்துகள் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.