ஒரு வரிச் செய்திகள்

 


               👲திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த பள்ளப்பட்டி பிரிவு சோதனை சாவடி அருகே போலீஸ் போல் நடித்து டிரைவர் சித்திக் என்பவரிடம் ரூபாய் 5000 பணம் பறித்த தவமணி (29) என்பவரை அம்மையநாயக்கனூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்கிறார்கள்.


👲தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா என்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை 

சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது


👲ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது சென்னை..! புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம்


👲அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு

அடுத்த மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைப்பு


👲சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் உத்தர பிரேதசத்தில் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாததது வெட்கக்கேடானது - அலகாபாத் உயர்நீதிமன்றம்


 👲20 ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம், 75 வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அடங்கிய 2 விமானங்கள் ரஷியாவில் இருந்து டெல்லி வந்தடைந்தன..!*


👲கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவிய ரஷ்ய அதிபர் புதினுக்கு நன்றி - பிரதமர் மோடி


👲திருச்சி பெல் நிறுவனத்தில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.*

*மத்திய - மாநில அரசுகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்.


 👲விருந்தினர்களையும், கூட்டமாக கூடுவதையும் தவிருங்கள்*

மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்*

சென்னையில் ஒரு நாளைக்கு 25,000  கொரோனா  பரிசோதனை செய்து வருகிறோம்*

ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்வதற்கான பணிகளை விரைவுப்படுத்தியுள்ளோம்*


 சிறப்பு அதிகாரி சித்திக் ஐ.ஏ.எஸ்*


👲சென்னையில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைவு..!*

கொரோனாவால் உயிரிழந்தால் அவர்கள் உடலை அடக்கம் செய்ய பணம் கேட்டு ஊழியர்கள் கட்டாயப் படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


 சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.


 👲கொரோனா தற்போது சுனாமி போல் பரவி வருகிறது.*


பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்..!*

 சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் பொறுப்பு ஐஏஎஸ் அதிகாரி சித்திக்.


 👲18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - முதல்நாளிலேயே 1.32 கோடி பேர் முன்பதிவு.