இன்றைய ஆன்மீக தகவல்
பலிபீடம் என்பது சமயக் காரணங்களுக்காகப் பலிகளைக் காணிக்கையாகச் செலுத்தும் இடமாகும்.
கோயில்களிலும், தேவாலயங்களிலும் மற்றும் பிற வழிபாட்டிடங்களிலும் பலிபீடங்கள் காணப்படலாம்.
இன்று கிறித்தவம், பௌத்தம், இந்து சமயம், சிந்தோ, தாவோயியம் முதலிய பல சமயங்களில் பலிபீடம் பயன்படுத்தப்படுகின்றது. யூத சமயத்தில் முற்காலத்தில் பலிபீடமும் பலிசெலுத்துதலும் இருந்தாலும் இரண்டாம் கோவிலின் அழிவுக்குப் பின்பு பலிசெலுத்துதல் இல்லாமல் போனது.
இந்து சமயத்தில்
இந்து சமயக்கோயில்களில் கொடிமரத்திற்கு அருகே அமைக்கப்படுகிறது.
ஆணவம், கன்மம், மாயை என்னும் மூவகை அழுக்குகளையும் களைந்த பின்பே இறைவனை அடைய இயலும் என்ற தத்துவத்தினை உணர்த்துவதற்காக இப்பீடங்கள் கோயில்களில் அமைக்கப்படுகின்றன
கடவுளுக்குப் பலி செலுத்தும் வழக்கம் பண்டையக் காலம் முதலே இருந்துள்ளது.
பலியானது திராவிடர் பண்பாட்டில் படையல் என்று அழைக்கப்பட்டது.
காய்கறி, கனிவகைகள், சமைக்கப்பட்ட உணவு மற்றும் மிருகங்களைப் பலியிடுவதும் இன்றளவும் பல சமயங்களில் உள்ளது.
நரபலி (மனித பலி) கொடுக்கும் வழக்கம் மனிதர்களிடையே முற்காலத்தில் இருந்தாலும் தற்போது பெரும்பான்மையாக இல்லை.
கோவிலில் பலி பீடம் ஏன்?●
ஆகம விதிப்படி எழுப்பப்பட்ட கோவிலில் மனித உடலைப் போலவே அமைக்கப்பட்டிருக்கும்.
அது எப்படியெனில்.......
□ பாதங்கள் - கோபுரம்
□ முழங்கால் - ஆஸ்தான மண்டபம்
□ தொடை - நிருத்த மண்டபம்
□ உறுப்பு - கொடிமரம்
□ தொப்புள் - பலி பீடம்
□ மார்பு - மகா மண்டபம்
□ கழுத்து - அர்த்த மண்டபம்
□ சிரம் - கர்ப்பக்கிருகம்
□ சிரத்தின் உச்சி - விமானம்
இதில் பலி பீடம் என்பது, நம் மனதுள் நமக்கு தெரியாது ஒளிந்திருக்கும்…..
● காமம்,
● ஆசை,
● குரோதம் (சினம்),
● லோபம் (கடும்பற்று),
● மோகம் (கற்பு நெறி பிறழ்வு),
● பேராசை,
● மதம் (உயர்வு தாழ்வு மனப்பான்மை),
மாச்சர்யம் (வஞ்சம்),
எனும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி செய்துக்கொள்ளுமிடம்.
வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் நலன் ஒன்றும் வந்துவிடாது.
வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான இயல்புகளெல்லாம் அந்த இடத்திலே பலி கொடுக்க வேண்டும்.
மனிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு பலியிட வேண்டும்.
மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது. மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும்.
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
பக்தியுடன்
*மோகனா செல்வராஜ்*