இரு வரி செய்திகள்

 


        👅நாளை முழு ஊரடங்கை ஒட்டி தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்; மக்கள் முழு ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் - தமிழக டி.ஜி.பி


👅ஞாயிற்றுக் கிழமைகளில் அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும்

முழு ஊரடங்கு நாளில் அம்மா உணவகம் செயல்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு

கொரோனா வழிமுறைகளை பின்பற்றி உணவு வழங்கப்படும்


👅சிகிச்சைக்கு வரும்போதே ஆக்சிஜன் சிலிண்டர்களையும் சுமந்து வரவேண்டிய அவலம்; ஹர்ஷவர்தன் பதவி விலக வேண்டும்: ப.சிதம்பரம் காட்டம்


👅பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 6 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு


👅தேசிய கல்விக்கொள்கையின் மாநில மொழிப்பெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு


👅ஆக்சிஜன் தேவைக்கு 104 என்கிற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் - தமிழக அரசு


👅தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை மறுநாள் முதல் அமல் - முழு விபரம்


👅வருகிற 26 ஆம் தேதி முதல் கொரோனாவுக்கு புதிய கட்டுப்பாடு அமலுக்கு வருகின்றன


👅புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு. ஏப்ரல் 26 அதிகாலை 4 மணி முதல் தியேட்டர்கள், மால்கள் இயங்க அனுமதி இல்லை


👅ஏப்.26ஆம் தேதி முதல் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதியில்லை 

- தமிழக அரசு


👅மாநகராட்சி, நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் செயல்பட அனுமதி இல்லை


👅அனைத்து உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை


👅வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.


👅இதர மாவட்டங்களுக்கு பொதுப் போக்குவரத்தை பொறுத்தவரை, ஏற்கனவே அறிவித்தபடி பேருந்துகளில் இருக்கைகளில் மட்டும் அமர்ந்து செல்லலாம்.


👅புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு கட்டாயம் 

- தமிழக அரசு


👅இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு முழு ஊரடங்கும் தொடர்ந்து அமலில் இருக்கும்


                         நிருபர் ,மணிவண்ணன்