ஒரு வரி செய்திகள்

 


            ஒரு வரி செய்திகள்.

👉நாளை முதல் வரும் மே 3ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து இணைப்பு விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளத


👉பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிக்க அமெரிக்காவும், சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன


👉தென் ஆப்பிரிக்காவில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


👉தமிழகத்தில் இரவு நேர பொதுமுடக்கம் இருக்கும் காலங்களில் பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.👉அயோத்தியில் வரும் 21ஆம் தேதி கொண்டாடப்படும் ராம நவமி மேளாவை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.👉தமிழகத்தில் இரவு நேர பொதுமுடக்கத்தின் போதும் அனைத்து ரயில்களும் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


👉டெல்லியில் காருக்குள் முகக்கவசம் அணியாமல் இருந்த கணவன், மனைவி... போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கைது


👉தமிழகத்தில் இருந்து வெளியேறும் வடமாநில தொழிலாளர்கள்


👉டெல்லியில் ஒருவாரத்திற்கு முழு பொதுமுடக்கம் அமல்


👉JEE மெயின் தேர்வு ஒத்திவைப்பு:


நாடு முழுவதும் வரும் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த  JEE மெயின் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


👉மே 2-ம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்


👉திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே 1ஆம் தேதி முதல் ரூ.300 டிக்கெட் பதிவு செய்த 15,000 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.👉தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.


👉நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்


விளையாட்டுச் செய்திகள்


👉ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி:


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 10வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.


👉டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி:


ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 11வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.