இருவரி செய்திகள்

 


👿👲கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், தற்போது இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 68 வயதான முக ஸ்டாலின் கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டார்.


👿ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக மக்கள் உயிரிழப்பதை வேடிக்கைப் பார்க்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


👿கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதியின் காவலர் துப்பாகியால் சுட்டு தற்கொலை.


👿அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக நடைபெறும் சர்வதேச சுற்றுச்சு ழல் மாநாட்டில் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். 👿மேற்கு வங்கத்தின் 43 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று ஆறாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.


👿பிரான்சில் இருந்து மேலும் நான்கு ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.


👿சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தனது பங்களிப்பை நிறுத்திக் கொள்ள ரஷ்யா திட்டமிட்டுள்ளது. 👿மே 2 ஆம் தேதி நள்ளிரவுக்குள் அனைத்து வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் வெளியாகும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.👿மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கு ஆக்சிஜன் தேவை மிக அதிகளவில் இருப்பதையடுத்து, விரைவாக மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன்களை விநியோகிக்க மத்திய அரசு இந்திய விமானப்படையின் உதவியை நாடியுள்ளது. 


👿முதல்வர் பழனிசாமியை நலம் விசாரித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்


👿திருமலை அஞ்சனாத்ரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்ற ஆதாரங்கள் கொண்ட புத்தகத்தை திருமலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் வெளியிட்டார்.

   

👿தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவின் தேசிய நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி சீனாவுடனான 2 ஒப்பந்தங்களை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.


👿கொல்கத்தாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


👿 பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ராபா;டோ பௌதிஸ்டா அகுட் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்


👿திருச்சியில் இருந்து கொழும்புக்கு நேரடி வாராந்திர விமான சேவை அடுத்த மாதம் மே 2-ந்தேதி தொடங்குகிறது.


👿 காஷ்மீர் பள்ளத்தாக்கையும் லடாக்கையும் இணைக்கும் ஸோஜி லா கணவாயை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக நேற்று (புதன்கிழமை) திறந்து விடப்பட்டுள்ளது.


👿வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 55 சதவீதம் குறைக்க ஐரோப்பிய யு னியன் நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.


👿நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதால், சுற்றுலாவை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், 50 சதவீத சுற்றுலா பயணிகளை தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


👿திண்டுக்கல் மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லு}ரி வேளாண்துறை மாணவர்கள் அம்பாத்துறை கிராமத்தில் தங்கி முகாம்களை நடத்தி வருகின்றனர். இதில் விவசாயிகளின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் சார்ந்த அன்றாட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை சேகரித்தனர்.