பத்மஸ்ரீ நடிகர் விவேக் அவர்களுக்கு தலைவர்கள் நடிகர்கள் கண்ணீர் அஞ்சலி

  சமூக சீர்திருத்த கருத்துகளை கூறி நடித்ததால் சின்னக் கலைவாணர் என்ற பட்டமும் நடிகர் விவேக்கு உண்டு.

5 முறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை பெற்றுள்ளார் நடிகர் விவேக்

ரன், சாமி, பேரழகன் படங்களுக்கு பிலிம்பேர் விருது பெற்றுள்ளார் விவேக்.


👉நடிகர் விவேக் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்


👉சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மறைவு செய்தி அறிந்து வேதனையடைந்தேன்

எண்ணற்ற படங்களில் அவரது நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தது

- முதல்வர் பழனிசாமி இரங்கல்


👉இன்னும் பல சாதனைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்த நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ! - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


👉நடிகர் விவேக்கின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கும் பேரிழப்பு - நடிகர் விஜயகாந்த்


👉சின்ன கலைவாணர். சமூக சேவகர் .என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவருடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.விவேக்கின் ஆத்மா  சாந்தி அடையட்டும் .நடிகர் ரஜினிகாந்த்.


👉மண்ணின் மகத்தான பெருங்கலைஞர் விவேக்... தமிழ்ச்சமூகத்திற்கு பேரிழப்பு-  சீமான் புகழஞ்சலி


👉கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம்வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பு

- நடிகர் கமல்ஹாசன்


👉தமிழ் திரையுலகில் நடிகர் விவேக் தனித்துவம் கொண்டவர் 

மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளையும், சமூக விழிப்புணர்வுக்கான கருத்துகளையும் தமது வசனங்கள் மூலம் பரப்பியவர் - பாமக நிறுவனர் ராமதாஸ்👉சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராகவும், செயற்பாட்டாளராகவும் நடிகர் விவேக் திகழ்ந்தார்

சனங்களின் கலைஞன்' எனக் கொண்டாடப்படும் அவரது பெருமைகள் என்றைக்கும் நிலைத்து நிற்கும் - டிடிவி தினகரன்


👉நல்ல மனிதர் விவேக்

விவேக் நல்ல நடிகர் மட்டுமல்ல; நல்ல மனிதர். அவரை நாம் இழந்துவிட்டோம்.

- நடிகர் யோகி பாபு


👉நடிகர் விவேக் மறைவிற்கு திராவிட இயக்க தமிழர் பேரவை செயலாளர் சுப. வீரபாண்டியன் இரங்கல்!


'👉முன்னோடி விவேக்'

"கலாம் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தவர். வெறும் கருத்துகளை மட்டும் அவர் சொல்லிவிட்டுப் போகவில்லை; அதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் விவேக்."

- பொன்ராஜ்


👉சமூக செய்தியை தனது நகைச்சுவை நடிப்பு மூலம் இணைத்த சமகால சிறந்த நடிகர் விவேக் - இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்


👉சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக்கின் பிரிவு, வார்த்தைகளில் சொல்ல முடியாத துயர் - இயக்குநர் பார்த்திபன்


👉நடிகர் விவேக்கின் மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்லாது, சமூகத்திற்கே பேரிழப்பு - நடிகர் ராகவா லாரன்ஸ்


👉நாங்கள் கஷ்டப்படும் காலத்தில் இருந்து நெருக்கிய நண்பர்கள் - ரமேஷ் கண்ணா


👉மனிதகுல முன்னேற்றத்திற்காக நீங்கள் செய்த நல்ல காரியங்களுக்கும் மிக்க நன்றி - நடிகை நஸ்ரியா


'👉நகைச்சுவையால் மக்களை சிந்திக்க வைக்க முடியும் என்பதை நிகழ்த்திக்காட்டிய பெருமை அவரைச் சேரும். இவ்வளவு சீக்கரத்தில் மரணமடைவார் என்று எதிர்ப்பர்க்கவில்லை’ - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்


“👉நடிகர் விவேக் நட்டு வைத்த மரங்களில் ஏதாவது ஒரு மரத்தின் நிழலில் அவரது ஆன்மா இளைப்பாறும்!” - நடிகர் ஆனந்த்ராஜ்


👉நடிகர் விவேக்கின் மறைவுக்கு கோடிக்கணக்கான மரங்களும் கண்ணீர் சிந்தும் - நடிகர் சூரி


“👉நல்ல கலைஞனை இறைவன் சீக்கிரம் அழைத்துக்கொண்டார்” - ராதாரவி


👉நடிகர் விவேக்கின் மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது. அவருக்கு எமது அஞ்சலி - தொல்.திருமாவளவன்


👉பொதுப்பணிகளில் ஆர்வம் மிகுந்த எனது மாணவரான நடிகர் விவேக்கின் இழப்பு ஈடு செய்ய இயலாதது

- சாலமன் பாப்பையா இரங்கல்


“👉அவர் நட்ட பல லட்சம் மரங்கள் கூட அவரை நினைத்து வாடும்!” - நடிகர் நாசர்.“👉எண்ணங்கள் மற்றும் மரங்களை நட்டமைக்கு நன்றி ” -நடிகர் பிரகாஷ் ராஜ்


👉Miss u sir.. உங்களது மரணம் எங்களுக்கு பேரிழப்பு; வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை -இயக்குநர் அட்லி


👉சமூக அக்கறையோடு பணியாற்றி நமது நெஞ்சங்களில் ‘நாயகனாக’ உயர்ந்தவர் விவேக் - ரவிக்குமார், எம்.பி


👉நடிகர் விவேக் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க கொடைக்கானலில் இருந்து மதுரை புறப்பட்டார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.. மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை பயணம்


👉விவேக் சார் நட்டுவைத்த லட்சக்கணக்கான மரங்கள் கண்ணீர்விட்டு அழும்!: இயக்குநர் #ஷங்கர் இரங்கல்..!