கொரோனா பாதிப்பு பற்றிய செய்திகள்
👉கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டியது
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு 18 ஆயிரத்தைத் தாண்டியது
தமிழ்நாட்டில் இன்று 18,692 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 113 பேர் உயிரிழப்பு
👉அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் 50 சதவீத படுக்கைகளை கோவிட் சிகிச்சைக்காக ஒதுக்க தமிழக அரசு உத்தரவு.
👉கொரோனா 2வது அலைக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணியாற்றிய15 ஊழியர்கள் இதுவரை உயிரிழப்பு*
காய்ச்சல், சளி உள்ள பக்தர்கள் திருமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்- அறங்காவலர் குழு
👉சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஆனந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
👉பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா 2 ஆம் அலை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது
* கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசின் அனைத்து துறைகளும் தீவிரமாக செயல்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்
👉சென்னையில் கடந்த வருடத்தை விட மூன்று மடங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
👉18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் நாளை தொடங்குவது சந்தேகமே - ராதாகிருஷ்ணன்
👉டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்கு கொரோனா உறுதி
👉ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற மேலும் ஒருவர் சென்னையில் கைது
தனியார் மருத்துவர் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே கைதான நிலையில் மேலும் ஒருவர் கைது