தமிழக கட்சிகள் தேர்தல் பிரச்சாரம்

 


            ஒவ்வொரு மாநிலத்திலும் தங்கள் ஆட்சி இருக்க வேண்டும் அல்லது அடிமைகளின் ஆட்சி இருக்க வேண்டும் என விரும்புகிறது பாஜக!


தமிழ்நாட்டில் பொம்மைகளை வைத்து ஆட்சி நடத்தினார்கள். புதுச்சேரியில் ஆட்சியைக் கலைத்தார்கள்.


மக்கள் பாஜக - அதிமுக கூட்டணிக்கு பதிலடி தரத் தயாராகிவிட்டனர். திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரச்சாரம்.              பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால் அது மு. க.  ஸ்டாலினுக்குத்தான் கொடுக்க வேண்டும்  - மாண்புமிகு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள்.             கோவை தெற்குத் தொகுதி வாக்காளர்களே,  உங்கள் வீட்டிற்கு ஓட்டுக்குப் பணமோ அல்லது பரிசுகளோ கொடுக்க யாராவது வந்தால் அவர்களை ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் அம்பலப்படுத்துங்கள். என்னையும் அதில் Tag செய்யுங்கள். நேர்மைக்குத் தலை வணங்க உங்கள் வீடு தேடி வருவேன். என்று கமல் பிரச்சாரம் செய்தார்


           நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  தனது திருவொற்றியூர் தொகுதி பெரியார் நகரில் ( 03.4.2021) நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் எழுச்சியுரையாற்றினார்.


         'நான் செங்கல்லை தூக்கி காட்டியதற்காக அண்ணா நகர் வேட்பாளர் நம் அண்ணன்  அவர்கள் வீட்டில் எல்லாம் ரெய்டு நடத்தினார்கள். என்னை தூக்கி வளர்த்த அண்ணன் அவர்களின் வெற்றி என்னுடைய வெற்றிபோன்றது.' அண்ணா நகர் MMDA காலனியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்த உதயநிதி ஸ்டாலின்