ஒரு வரிச் செய்திகள்

 


    ஒரு வரிச் செய்திகள் 


👉 தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


👉 தமிழக சட்டசபை தேர்தலில் 4 கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 311 பேர் வாக்களித்தனர். இவர்களில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.


👉 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதி மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றால் அது அவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.👉 சென்னை காசிமேடு உள்பட மீன் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை நாட்களில் அதிக அளவு மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதாக மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


👉 திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.


👉 தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 23-ம் தேதி நடைபெற இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 


👉 பழனி முருகன் கோவிலில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


👉 கடலுக்கு படகுகளுடன் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் வருகிற 14-ம் தேதி இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


👉 மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை ஹர்சல் பட்டேல் பெற்றுள்ளார்.👉 ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பு வகித்த 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் எழுந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்திய மாநில தகவல் ஆணையம், அவர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப தமிழக தலைமைச் செயலாளருக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளது.


👉 கோயம்பேடு சில்லறை வியாபாரிகள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.