வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 4 நோயாளிகள் உயிரிழப்பு தொடர்பாக நோட்டீஸ்.
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 7 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் விரிவான அறிக்கை அளிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோக குறைபாட்டால் நோயாளிகள் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. உறவினர்களும் குற்றம் சாட்டிய நிலையில் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்திருந்தார்.
வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மருத்துவ கல்வி இயக்குநர், வேலூர் அரசு மருத்துவமனை டீன் ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 4 நோயாளிகள் இறந்ததாக வெளியான செய்தியின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.