இன்றைய (24-04-2021) ராசி பலன்கள்

 

மேஷம்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு அமைவதற்கான சூழல் உண்டாகும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். புதிய சிந்தனைகள் தோன்றும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். அவ்வப்போது சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

ரிஷபம்

மனைவியின் ஆதரவால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் மேம்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மிதுனம்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல் அமையும். இளைய உடன்பிறப்புகளால் நல்லதொரு சகாயம் உண்டாகும். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.

கடகம்

தொழில் தொடர்பான செயல்பாடுகளில் சிறு மாற்றங்களை செய்வீர்கள். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். செவித்திறனில் ஏற்பட்டுள்ள உபாதைகள் குறையும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.

சிம்மம்

பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். அறப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். வசதி வாய்ப்புகளால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய நபர்களின் நட்புகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த சோர்வுகள் அகலும். புனித பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும்.

கன்னி

அலைச்சல்களால் சாதகமான சூழல் அமையும். புதிய முதலீடுகள் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உடல் தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் நினைத்த சில காரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் இணைந்து புதிய செயல்களினால் தனலாபம் உண்டாகும்.

துலாம்

வெளியூர் சம்பந்தமான தொழில் முயற்சிகளால் லாபம் அதிகரிக்கும். தலைமை பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும். விவாதங்களில் சாதகமான சூழலால் வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். பயணங்களால் லாபம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும்.

விருச்சகம்

தொழில் அலைச்சல்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் லாபம் அடைவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களிடம் அமைதியுடனும், அனுகூலமுடனும் நடந்து கொள்ளவும். சர்வதேச தொழில் சார்ந்த செயல்பாடுகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். உடனிருப்பவர்களின் உதவிகளால் மனமகிழ்ச்சி ஏற்படும்.

தனுசு

செய்தொழிலின் மேன்மைக்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். அரிய கலைகளின் மீது தனிப்பட்ட ஈர்ப்பு ஏற்படும். புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டமிட்டு அதனை நிறைவேற்ற முயற்சிகளை செய்வீர்கள்.

மகரம்

குடும்ப உறுப்பினர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். சமூகச்சேவை புரிபவர்களுக்கு புகழ் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வாகனச்சேர்க்கை உண்டாகும். பெரியோர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கூட்டாளிகளுக்கிடையே மனக்கசப்புகள் ஏற்படும். செயல்பாடுகளின் தன்மை அறிந்து செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும்.

மீனம்

அந்நியர்களிடம் பேசும்போது சிந்தித்து செயல்படவும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாக அமையும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய ஆடைச்சேர்க்கை உண்டாகும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.