இன்று (01-3-21)முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு, கட்டணமாக ரூ.250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் இந்த உலகையே ஆட்டி படைத்து வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியது. அதன்படி, தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில், தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு, கட்டணமாக ரூ.250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.150 மற்றும் சேவை கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.