பிக்பாஸ் சீசன் - தொகுப்பாளராகும் நடிகர் சிம்பு

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் பிரபலமான ஷோ பிக்பாஸ் . கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா மற்றும் மூன்றாவது சீசனில் முகேன் ராவ் டைட்டிலை வென்றனர் .

அதன் பின் நான்காவது சீசன் சமீபத்தில் முடிவடைந்ததும் ,அதில் ஆரி அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் 5-வது சீசன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் சீசன் 5-ஆனது ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் நடிகர் கமல்ஹாசன் தேர்தலில் பிஸியாக உள்ளதால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் பகுதியில் வெற்றிபெற்றுவிட்டால் கண்டிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில்


5வது சீசனை அவரால் தொகுத்து வழங்க முடியாது.

இந்த காரணத்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. 

ஏற்கனவே மாநாடு, பத்து தால என பல படங்களில் நடித்து வரும் சிம்பு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.