முதல் முறையாக திமுகவுடன் இணைந்து போட்டியிடுவது மகிழ்ச்சி – வைகோ

 


கலைஞர் கருணாநிதியிடம் ஸ்டாலினுக்கு பக்கப்பலமாக இருப்பேன் என உறுதியளித்தேன். கருணாநிதியிடம் அளித்த வாக்குறுதியின் படி, திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளேன்.

முக ஸ்டாலினை அனைத்து தகுதிகளையும் கொண்ட வேட்பாளராக பார்க்கிறேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஒரு கட்சி 12 தொகுதிகள் குறையாமல் போட்டியிட்டால் தான் 5% அடிப்படையில் ஒரு சின்னம் ஒதுக்கப்படும்.

இந்த நெருக்கடியான சூழலில் மற்றும் பிரச்சாரத்துக்கு 12 நாட்கள் உள்ள நிலையில், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு எடுத்துள்ளோம். மாநிலம் முழுவதும் தேர்தல் பரப்புரை செய்யப்படும். ஏனென்றால், இந்துத்துவ கட்சிகள் தமிழக்தில் இந்தி, சமஸ்கிருதத்தை புகுத்த பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதால், பாஜகவை அடியோடு ஒழித்துக்கட்ட திமுகவுக்கு முழு ஆதரவையும் தருவோம்.

சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறைக திமுகவுடன் இணைந்து போட்டியிடுவதால் மகிழ்ச்சி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். முக ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக பார்க்கும்போது, அனைத்து தகுதிகளையும் கொண்ட வேட்பாளராக பார்க்கிறேன் என கூறியுள்ளார். தொகுதி பங்கீடு குறித்த உடன்பாடு மன நிர்வாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.