செய்திகள் தஞ்சை மேக்ஸ்வெல் பள்ளியில் புதியதாக 15 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட பள்ளிகளில் மேலும் 29 மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

பட்டுக்கோட்டை பிருந்தாவனம் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் என 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

என்.எல்.சி. நிறுவனத்திற்குட்பட்ட நெய்வேலி டவுன்ஷிப்பில் கொரோனா அதிகரித்து வருவதால் சந்தைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மக்கள் நலன் கருதி மார்ச் 19-ம் தேதி அனைத்து வாரச் சந்தைகளும் மூடப்பட்டது. 

______________________

புதுச்சேரியில் மார்ச் 22 முதல் 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஆளுநர் தமிழிசை விடுமுறை ந உத்தரவிட்டுள்ளார்.

______________________

மேட்டூர் அணை நீர்மட்டம் 101.01 அடியிலிருந்து 100.89 அடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 33 கனஅடியிலிருந்து 56 கனஅடியாக அதிகரித்துள்ளது.

____________________

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.93.11,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.86.45-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.