இன்று ஒரு தகவல்


கை குழந்தையோடு பயணம் செய்பவரா நீங்கள்? அப்ப உங்களுக்காக இந்த பதிவு

பொதுவாகவே பெற்றோர்கள் பயணத்தின்போது கை குழந்தைகளை அழைத்துச் செல்வது சிரமமான ஒன்று தான்.


பயணம் செய்யும் பொழுது நாம் தனித்து சென்றாலே எத்தனையோ விஷயங்களை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்; இதில் ஒரு குழந்தைக்கு தாய் தந்தையாகி குழந்தையுடன் பயணம் செய்ய வேண்டும் என்றால் சொல்லவா வேண்டும். பயணத்திற்கு பல பைகளை கட்டி எடுத்துச் செல்லும் பொழுது, குழந்தைகளுக்கு தேவையான அனைத்தையும் சேர்த்து எடுத்துச் செல்ல வேண்டும்.

அது கண்டிப்பாக பயணச் சுமையை அதிகரிக்கத் தான் செய்யும்; பயணச் சுமை அதிகரிக்கும் என்பதற்காக குழந்தைக்கு தேவைப்படும் விஷயங்களை வைத்து விட்டு செல்லவோ அல்லது குழந்தையுடன் பயணத்தில் ஈடுபடாமல் இருக்கவோ முடியாது.

எனவே இந்த பதிப்பில் குழந்தைகளுடன் செய்யும் பயணத்தில் மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் என்னென்ன, குழந்தைகளுடனான பயணத்தில் சுமையை குறைத்து இனிமையை கூட்டுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

முதலில் குழந்தைகளுடன் பயணம் செய்யும் பொழுது, அவர்களுக்கு தேவைப்படும் மறக்காமல் டுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

தொலை தூர பயணங்கள் மேற்கொள்ளும் போது குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கு பதிலாக, தங்களது பயணத்தை ரத்து செய்வது சிறந்தது. 

ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் அப்படிப்பட்ட வேளையில்  குழந்தைகளை கொண்டுபோகும் பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.

தடுப்பூசி

குழந்தைகளுக்கு போடவேண்டிய தடுப்பூசியை அந்தந்த மாதங்களில் சரியாக போட்டு விட வேண்டும். ஏனென்றால் எந்த ஊரில் எப்படிப்பட்ட நோய் தொற்று இருக்கும் என்பது நமக்கு தெரியாது. 

குழந்தைகளைப் பொறுத்தவரையில் எளிதில் அவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது .தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளும் போது எப்படிப்பட்ட தொற்றுகளில் இருந்து நாம் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளலாம். தடுப்பூசி போடப்பட விட்டால் அந்த பயணத்தை ரத்து செய்வது சிறந்தது.

உணவு

குழந்தைகளைப் பொறுத்தவரையில் உணவு விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகளுக்கு 6 மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது மருத்துவரின் ஆலோசனை. 

ஆனால் சில சமயங்களில் பெற்றோருக்கு தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படும் போது, மூன்று மாதங்களிலேயே புட்டிப்பால் அல்லது மற்ற திரவப் பொருட்களை கொடுக்க தொடங்குகின்றனர்.

குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது அரை திட உணவுகளை குழந்தைகளுக்கு ஏற்ற வண்ணம் தயார் செய்து வைத்துக் கொள்ளவேண்டும். வழியில் வாங்கிக் கொடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை தூர எறிந்து விடுங்கள்.

டயப்பர்

குழந்தைகளுக்கு தேவையான உடைகளை எடுத்துச் செல்ல வேண்டும்; குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுப்பது, சிறுநீர், மலம் கழிப்பது போன்ற விஷயங்களை செய்வதால், அவர்களுக்கு அதிக மாற்றுத்துணிகள் தேவைப்படும். ஆகையால், மறக்காமல் பயணத்திற்கு தேவையான அளவு துணிகளை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளைப் பொறுத்தவரையில் இவர்கள் எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை  சிறுநீர் கழிப்பார்கள் அல்லது மலம் கழிப்பார்கள் என்பது பெற்றோர்கள் ஓரளவுக்கு அறிந்து இருப்பார்கள். 

அதற்கு ஏற்ற வண்ணம் டயப்பர் அல்லது மிகவும் லேசான துணிகளை எடுத்துக் கொள்வது நல்லது. 

குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் போது அவர்களது சருமத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாத வண்ணம் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் அழுதால், அவர்களுக்கு பிடித்தமான பொம்மையை காட்டினால் கொஞ்சம் அமைதியாகி விடுவார்கள்.

எனவே குழந்தைகளின் ஃபேவரைட் பொம்மையை பயணத்தில் மறவாமல் குழந்தையுடன் எடுத்துச் செல்ல வேண்டும். அதிலும் குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கும் சமயமாய் இருந்தால் அதற்கான பிரத்யேக பொம்மைகளையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

குழந்தைகளுக்கு பயணத்தில் தேவைப்படும் குல்லா மற்றும் தொப்பி வகையறாக்களை உங்கள் பயணச் சுமை பைக்கெட்டுகளில் தவறாது எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

இது நீங்கள் பயணம் செய்யும் காலகட்டத்தை பொறுத்து, உங்கள் குழந்தையின் தேவையை பொறுத்து மாறுபடலாம்.

பேருந்து

குழந்தைகளைக் கொண்டு செல்லும் போது பொதுவாக பேருந்தில் செல்வதை தவிர்த்தல் நல்லது. 

வாடகை கார் அல்லது டிராபிக் சர்வீஸ் கொடுக்கும் நிறுவனங்களில் காரை பயன்படுத்துவது சிறந்தது.

அப்போதுதான் நமது விருப்பப்படி பயணத்தை அமைத்துக் கொள்ளலாம். காரில் செல்ல இயலாதவர்கள், ரயிலில் செல்வது நல்லது.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் பயணம் தொடரும்.

நன்றி. 

மோகனா செல்வராஜ்