தேர்தல் செய்திகள்

 


கூட்டணி அமைக்க 3 நாட்கள் அவகாசம் கொடுப்பதாகவும், விருப்பமுள்ளவர்கள் வரலாம் என்றும் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

தேர்தல் நேரத்தில் சிலருக்கு தமிழ் மீது பற்று வருகிறது. இதை நம்பி ஏமாந்து யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்றும், இங்கு கல்வி, எதிர்காலம் எதுவும் விற்பனைக்கு அல்ல. என்னையும் சிலர் விலைக்கு வாங்க பார்த்தார்கள். ஆனால், தான் விலை போகவில்லை என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இன்றும், நாளையும் அடுத்தடுத்த நல்ல செய்திகள் வரவுள்ளது என்றும், கூட்டணி அமைக்க 3 நாட்கள் அவகாசம் கொடுப்பதாகவும், விருப்பமுள்ளவர்கள் வரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

________________________

கருப்பு பலூன் விடும் பள்ளி பிள்ளைகளிடம் நிர்வாகம் சென்றால், மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் தமிழகத்திற்கு வராது.

சென்னை மயிலாப்பூரில் ‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய எச்.ராஜா அவர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கம்ம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகம் வந்த பிரதமர் மோடியை எதிர்த்தனர். இவர்கள் எல்லாரும் கருப்பு பலூன் விடும் பள்ளி பிள்ளைகள். இந்த பள்ளி பிள்ளைகளிடம் நிர்வாகம் சென்றால், மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் தமிழகத்திற்கு வராது என்று தெரிவித்துள்ளார்.

________________________


2011 தேர்தலில் நாம் அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் இன்று அதிமுக என்ற கட்சியே தெரிந்திருக்காது என தேமுதிக சுதீஷ் தெரிவித்துள்ளார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக  41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது.

மேலும், கூட்டணிக்காக அவர்களை தேடி நாம் செல்லவில்லை, அவர்கள்தான் நம் பின்னாடி வந்து கொண்டியிருக்கிறார்கள் என பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

_________________________

வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்த 4,500 கோழிக்குஞ்சுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து இடங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், குன்னூர் அருகே தலா ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 25 கோழிக்குஞ்சுகள் வீதம் அதிமுகவினர் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து, வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்த 4,500 கோழிக்குஞ்சுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.