மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்

 


இன்று மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில், கமலஹாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், துணை பொது செயலாளர் ராதிகா, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் நேற்று தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நேற்று வெளியானதை தொடர்ந்து, இன்று மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் 9:30 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.