எனது வாழ்க்கையை மக்களுக்காக அர்பணித்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மயய்ம் கட்சி, சமக, ஐஜேகே என சில கட்சிகளை இணைத்துக் கொண்டு முதல்வர் வேட்பாளராக களமிறங்கிவிட்டார்.
மநீம சார்பில் தேர்தலில் போட்டியிடும் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பாக முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதி்யில் பாஜக, காங்கிரஸை எதிர்த்து கமல்ஹாசன் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், வரும் தேர்தலில் தோற்றால் அரசியலிலிருந்து விலகி விடுவீர்களா என்ற கேள்விக்கு, இல்லை என்று கூறி எனது வாழ்க்கையை மக்களுக்காக அர்பணித்துள்ளேன் என்றும் தொடர்ந்து அரசியல் ஈடுபடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.