இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி

 


இன்று (மார்ச்-1) மேலும் ரூ.25 அதிகரித்து, ரூ.835 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சமீப காலமாக பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி சிலிண்டரின் விலை ரூ.710 ஆக இருந்தது.

இந்நிலையில், பிப்ரவரி 4-ம் தேதி ரூ.25 ரூபாய் அதிகரித்து ரூ.735 ஆக விற்பனை செய்யப்பட்டது. பின் பிப்ரவரி 15-ல் மேலும் ரூ.50  அதிகரித்து ரூ.785 -க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து பிப்.25ம் தேதி ரூ.25 அதிகரித்து ரூ.810-ஆக விற்பனையானது.

பிப்ரவரி மாதத்தில் மட்டும் சிலிண்டர் விலை 3 முறை அதிகரித்த நிலையில், இன்று (மார்ச்-1) மேலும் ரூ.25 அதிகரித்து, ரூ.835 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் சிலிண்டர் விலையால் இல்லத்தரசிகள் மேலும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.