கிக்பாக்ஸிங் தங்கம் வென்ற தமிழக காவல் உதவி ஆய்வாளர்

 


            தேசிய சீனியர் கிக்பாக்ஸிங் சாம்பியன் போட்டியில் தமிழக அணிக்காக தங்கப்பதக்கம் வென்ற பழனி தாலுகா காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து குவிந்து வருகிறது.


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் இசக்கி ராஜா. இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் பணியாற்றி வரும் போது ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த நிலையில், ரவுடிகளுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்து மக்களிடம் வரவேற்பை நல் மதிப்பை பெற்றார்.

                      



 மிகச்சிறந்த கிக்பாக்ஸிங் வீரரான இவர், ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய சீனியர் கிக்பாக்ஸிங் போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்து கொண்டார்.

85 முதல் 90 கிலோ பிரிவு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நிலையில், சாம்பியன் ஆப் சாம்பியன் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியன் பட்டத்தையும் பெற்றுள்ளார்.


காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவுக்கு காவல்துறையினரும், பொதுமக்களும்  பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், தான் பணிபுரியும் பழனி தாலுகா காவல் நிலைய சுவர்களில் " தங்களுக்கு சேவை செய்ய எங்களிடம் சிபாரிசு தேவையில்லை " என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளார். இந்த வாசகமும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.