ஒரு வரி செய்திகள்

 



       செய்திகள்


உலகச் செய்திகள்

கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம் :


எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்குக் கப்பல் திங்கட்கிழமை முழுமையாக மீட்கப்பட்ட நிலையில், சுமார் ஒரு வார காலத்துக்குப் பின் அப்பாதையில் சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது.




அனைத்து பள்ளிகளும் மூடல் :


தொடர்ந்து காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் மாணவ-மாணவிகளின் உடல்நிலையை கருத்தில் கொண்டு நேபாளத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) வரை மூடப்படுவதாக அந்நாட்டு கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலச் செய்திகள்

தேர்தல் ஆணையம் உறுதி :


வரும் தேர்தலில் 15 வருடங்களுக்கு மேல் பழமையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.





15ஆம் தேதி முதல் ஆன்லைன் தேர்வு :


என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது.




விமான போக்குவரத்து இயக்குநரகம் சுற்றறிக்கை :


விமான நிலையங்களில் நோய்தொற்று கட்டுப்பாடுகளை மீறுபவர்களிடம் உடனடியாக அபராதம் வசூலிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


மாவட்டச் செய்திகள்

35 பேருக்கு அபராதம் :


பாபநாசம் பகுதியில் முகக்கவசம் அணியாமல் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்ற 35 பேருக்கு தலா 200 வீதம் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


விளையாட்டுச் செய்திகள்

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி :


22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2022) நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கத்தாரில் நடக்கிறது.