ஒரு வரிச்செய்திகள்

 


👉 தமிழக தென் மாவட்டங்களில் வருகின்ற மார்ச் 6, 7, 8 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


👉 தமிழகத்தில் திட்டமிட்டபடி வரும் மே 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.


👉 மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு இந்திய ஆராய்ச்சியாளருக்கு 50,000 டாலர்களை (சுமார் ரூ.36,36,875) நிறுவனத்தின் பக் பவுண்டி திட்டத்தின் கீழ் வெகுமதியாக வழங்கியுள்ளது.


👉 ரூ.15 கோடி மதிப்பீட்டில் மின்மயமாக்கப்பட்ட நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி வரையிலான 13 கி.மீ. தூர அகல ரயில் பாதையை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் இன்று (வியாழக்கிழமை) பார்வையிட்டார்.👉 மேற்குவங்கச் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை மம்தா பானர்ஜி நாளை அறிவிக்க உள்ளார்.


👉 மும்பை அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் பெங்கள ரு அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


👉 துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 420 கிராம் தங்கம் மற்றும் ரூ.28 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், மடிக்கணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


👉 ஐபிஎல் போட்டிக்கான சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாம் மார்ச் 9ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.


👉 இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சு ர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கான தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. 👉 திருவாரூர் அருகே லாரி ஓட்டுநரிடத்தில் 8,000 லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


👉 திருப்பு ர் மாவட்டத்தில் 50 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


👉 லாரி வாடகை உயர்வதால் காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


👉 தாஜ்மஹhலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தொலைபேசி அழைப்பு மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு தாஜ்மஹhலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


👉 தமிழக மீனவர்கள் எல்லையை கடக்காமல் இருக்க எச்சரிக்கை அலாரம் தேவை என ஐகோர்ட் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.


👉 மக்கள் வாழ்வதற்கான சிறந்த நகரங்களுக்கான பட்டியலில் தமிழகத்தின் சென்னை 4-ம் இடம் பிடித்துள்ளது.


👉 முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.