இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காலை உணவு என்றாலே, இட்லி, தோசையை தான் செய்து சாப்பிடுவது.
மாலையில் மேகமூட்டத்துடன் இருக்கும் போது சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஏதேனும் சாப்பிட நினைத்தால், அதுவும் வித்தியாசமாக செய்து சுவைக்க ஆசைப்பட்டால், வீட்டில் இருக்கும் இட்லி மாவைக் கொண்டு போண்டா செய்து சுவையுங்கள்.
இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பதோடு, மிகவும் ஈஸியாக செய்யலாம். இங்கு அந்த இட்லி மாவு போண்டாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
இட்லி மாவு பயன்படுத்தி வித்தியாசமான ஒரு ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காலை உணவு என்றாலே, இட்லி, தோசையை தான் செய்து சாப்பிடுவது.
தற்போது இந்த பதிவில், இட்லி மாவு பயன்படுத்தி வித்தியாசமான ஒரு ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- இட்லி மாவு – 2 கப்
- வெங்காயம் – 1
- கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 1
- கொத்தமல்லி – சிறிதளவு
- ரவை – கால் கப்
- அரிசி மாவு – கால் கப்
- சீரகம் – சிறிதளவு
- உப்பு – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் இட்லி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனுள், வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், கொத்தமல்லி, சீரகம், ரவை, அரிசி மாவு ஆகியவவற்றை கெட்டியாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் பிசைந்து கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சிறு சிறு உருண்டைகளாக போட வேண்டும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான இட்லி மாவுபோண்டா /வடை தயார்.
சுவையான இட்லி மாவு போண்டா /வடை தயார்
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் சமையல் பயணம் தொடரும்.
வணக்கம் அன்புடன் கார்த்திகா