சினிமா செய்திகள்

 


இயற்கை, பேராண்மை போன்ற படங்களை இயக்கிய தமிழ் திரைப்பட இயக்குனரான எஸ்.பி.ஜனநாதன் மூளைச்சாவு அடைந்துள்ளார்.

இயற்கை, பேராண்மை போன்ற படங்களை இயக்கிய தமிழ் திரைப்பட இயக்குனரான எஸ்.பி.ஜனநாதன் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதனையடுத்து, இவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விஜய்சேதுபதி-ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகும் லாபம் படத்தை இயக்கி வந்த நிலையில், இவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் படம் வெளியீட திட்டமிட்டிருந்த மார்ச் 26 ஆம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் இந்த மாதம் 26 ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுவதாகவும் , படக்குழுவினர் அனைவரிடமும் பேசி விரைவில் டாக்டர் படத்தின் அடுத்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் சில நாட்களிற்கு முன்பு படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தார்கள்.

______________________

விக்ரம் நடிக்கவுள்ள சியான் 60 படத்தை வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்.  

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் சியான் 60. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றவுள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.  மேலும் நடிகை சிம்ரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.