பீட்ரூட் என்றாலே சிலருக்கு பிடிக்காது. ஆனால் இந்த பீட்ரூட் வைத்து பிரியாணிக்கு ஈடான சுவை கொண்ட சாதம் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.
உங்கள் சுவையை தூண்டும் பீட்ரூட் சாதம் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பீட்ரூட் சாதம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க
தேவையான பொருட்கள்
- பீட்ரூட் பெரியது 1
- பிரியாணி இலை 1
- பட்டை 1
- மிளகு தூள் 1/2 tsp
- ஏலக்காய் 2
- இஞ்சி பூண்டு விழுது 1 tsp
- மஞ்சள் தூள் 1/4 tsp
- மிளகாய் தூள் 2 tsp
- பெரிய வெங்காயம் 2
- அரிசி 2cup
- நெய் 3tsp
- உப்பு, கறிவேப்பிலை, புதினா, முந்திரி, பிளம்ஸ் - தேவைக்கேற்ப
- எண்ணெய் 2 tsp
- பச்சை மிளகாய் 3
செய்முறை
முதலில் குக்கரில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, பட்டை, நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். பின் மிளகாய் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விட்டு மூடி வைக்கவும்.
அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவை சேர்த்து இவற்றுடன் புதினாவையும் சேர்த்து அதன் பின் துருவி வைத்துள்ள அல்லது சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
லேசாக வதங்கியதும் ஊறவைத்து எடுத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து தண்ணீர் தேவையான அளவு ஊற்றி, 3 விசில் வரும் வரை மூடிவைக்கவும். அதன் பின் லேசாக நெய் ஊற்றி இறக்கினால் அட்டகாசமான பீட்ரூட் சாதம் வீட்டிலேயே தயார்.
டேஸ்டி & கலர்புல் பீட்ரூட் சாதம் தயார்.
பிரியாணிக்கு ஈடான சுவை கொண்ட பீட்ரூட் சாதம் தயார்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் சமையல் பயணம் தொடரும்.
வணக்கம் அன்புடன் கார்த்திகா