தேர்தல் செய்தி

 வாக்குச் சாவடிகளில் கேமரா பொருத்தும் பணி நடக்க உள்ளதால் பள்ளிகளை திறந்து வைக்க தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். 

ஆய்வு, கேமரா பொருத்தம், தேர்தல் ஒத்திகை நடக்க உள்ளதால் பள்ளி வளாகங்களை திறந்து வைத்திருப்பதை உறுதி செய்ய பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளருக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

______________________

 திருவொற்றியூரில் போட்டியிடும் சீமானின் ஆண்டு வருமானம் 1000 அல்ல; 4.72 லட்சம் ரூபாய் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சீமானின் ஆண்டு வருமானம் 1000 அல்ல, 4,72,900 என குறிப்பிடப்பட்டு புதிய பிரமாணப்பத்திரம் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீமான் மனைவி கயல்விழியின் ஆண்டு வருமானமும் புதிய பிரமாணப்பத்திரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2016-2017, 2017-2018 நிதியாண்டுகளில் சீமான் மனைவிக்கு வருமானம் இல்லை என இருந்தது. 2016-2017ல் ரூ.2,65,890, 2017-18 ல் 2,82,900 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

________________________

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார். சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனி அணியாக களம் காண்கிறது. சமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மநீம சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறது. கமல்ஹாசன் இன்று காலை 12 மணிக்கு கோவையில் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்.

________________________________

வேளச்சேரி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும் என நினைத்தேன்; ஆனால் நான் துரதிர்ஷ்டசாலி என சந்தோஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

__________________________