கோதுமை ரவை உப்புமா

  


கோதுமை ரவை உப்புமா !!

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் உகந்த சம்பா ரவை அல்லது கோதுமை ரவை உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தினமும் கோதுமையால் ஆன உணவை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இப்போது காய்கறிகள், வெந்தயக்கீரை, கோதுமை ரவை வைத்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

கோதுமை ரவை - 2 கப்

வெங்காயம் - 2

கேரட், கோஸ், பீன்ஸ் கலவை - 2 கப் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 4

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - 1 டீஸ்பு ன்

கடலைப் பருப்பு - 1 டீஸ்பு ன்

உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பு ன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

வெந்தயக்கீரை - ஒரு கட்டு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :

முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

பின் கோதுமை ரவையை ஒரு வெறும் வாணலியில் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். 

வெந்தயக்கீரையை சுத்தம் செய்து இலையை மட்டும் ஆய்ந்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு  சூடானதும் கடுகு, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் வெந்தயக்கீரை, காய்கறிகள், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பிறகு காய்கறிகள் சற்று வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். 

பின் தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்த ரவையை சேர்த்து கிளறி வேக விடவும்.

பின் மூடியை திறந்து ரவை அடி பிடிக்காமல், தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறி இறக்கிவிட வேண்டும்.

பிறகு நன்றாக வெந்து தண்ணீர் எல்லாம் வற்றியதும் கடைசியாக கொத்தமல்லித்தழையைச் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறினால், சத்தான  கோதுமை ரவை உப்புமா தயார்.

இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

சுவையான கோதுமை ரவை உப்புமா தயார்

இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை  செய்திகள் குழுவின்  சமையல்  பயணம் தொடரும்.

வணக்கம் அன்புடன் கார்த்திகா