தேர்தல் செய்திகள்

 


இலவசங்களையும், கவர்ச்சி திட்டங்களையும் கூறி மக்களை ஏமாற்ற தயாராக இல்லை.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையடுத்து இந்த தொகுதியில் முதல் நாள் பரப்புரையில் ஈடுபட்டார். திருவொற்றியூரில் தேரடி, பர்மா காலனி, போன்ற பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

_______________________

அதிமுக-தேமுதிக கூட்டணி இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிற நிலையில், தேமுதிக சார்பில், இன்று அவசர ஆலோசனை நடைபெறவுள்ளது. 

தேமுதிக, அதிமுகவிடம் 41தொகுதிகள் கேட்ட்டன. ஆனால் அதிமுக இதற்க்கு மறுப்பு தெரிவித்த நிலையில், அடுத்தகட்டமாக 23 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.  ஆனால், அதிமுக 15 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் மட்டுமே வழங்க முன்வந்துள்ளது. இதனையடுத்து, அதிமுக-தேமுதிக கூட்டணி இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிற நிலையில், தேமுதிக சார்பில், இன்று அவசர ஆலோசனை நடைபெறவுள்ளது.

______________________________

அர்ஜுன் மூர்த்தியின், இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக கூறப்பட்ட போது, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன் மூர்த்தி நியமிக்கப்பட்டார்.

ஆனால், ரஜினி கட்சி தொடங்கவில்லை என அறிவிப்பு வெளியிட்ட பின், அர்ஜுன் மூர்த்தி, ‘இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி, தேர்தலில் போட்டியிடுகிறார். இதனையடுத்து, இவரது கட்சிக்கு ரோபோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
____________________________

மநீம 154 தொகுதிகள், சமக 40 தொகுதிகள், ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மநீம 154 தொகுதிகள், சமக 40 தொகுதிகள், ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மநீம பொது செயலாளர் சி.கே.குமரவேல், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்துள்ளது

_________________________