கல்யாண வீடுகளில் வைக்கக்கூடிய சேமியா பாயாசத்தை பலருக்கும் பிடிக்கும்.
ஆனால் இதை எவ்வாறு வீட்டில் செய்வது என்ற முறையான ஒரு செய்முறை பலருக்கும் தெரியாது. இன்று அதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- சேமியா
- ஜவ்வரிசி
- முந்திரி/பாதாம்
- நெய்
- சர்க்கரை
- பால்
- உப்பு
- ஏலக்காய்த்தூள்
செய்முறை
முதலில் ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி பருப்பு, உலர் திராட்சை மற்றும் விருப்பப்படுபவர்கள் பாதாமும் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் அதே சட்டியில் சிறிதளவு சேமியா சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுக்காமல் சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து களி போலாகிவிடும். எனவே லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொண்டு அதே சட்டியில் ஜவ்வரிசியை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் வறுத்து வைத்துள்ள ஜவ்வரிசியில் 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் நன்றாக வேகவைத்து அதன் பின்பு, காய்த்து வைத்துள்ள பாலை சேர்த்து கிளறவும்.
கொதி வந்ததும் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து ஒரு சிட்டிகை அளவு உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும். சேமியா ஐந்து நிமிடத்திற்குள் நன்றாக அவிந்துவிடும்.
இதற்குள் ஏலக்காய் தூள் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி இறக்கினால் அட்டகாசமான சேமியா பாயாசம் வீட்டிலேயே தயார்.
இனி சேமியா பாயாசம் சாப்பிடுவதற்காக கல்யாண வீட்டுக்குப் போக வேண்டும் என்ற அவசியம் இருக்காது.
சுவையான சேமியா பாயாசம் தயார்
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் சமையல் பயணம் தொடரும்.
வணக்கம் அன்புடன் கார்த்திகா