தேர்தல் செய்திகள்

 


அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.

நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு சுலபமான முடிவு எட்டப்படவில்லை, தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்தது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.

_____________________

காங்கிரசிற்கு இடத்தை குறைத்து கொடுப்பவர்கள் தான் பிஜேபி-க்கு ‘பீ’ டீம் என கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியை இல்லாமல் செய்ய வேண்டும் என்பது தான் பாஜகவின் மனக்கோட்டை. 

அப்படி அவர்கள் செய்யும், அதே காங்கிரசுக்கு போதிய இடங்கள் கொடுத்து கௌரவிக்காமல், காங்கிரசிற்கு இடத்தை குறைத்து கொடுப்பவர்கள் தான் பிஜேபி-க்கு ‘பீ’ டீம் என  கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

_____________________
தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை திமுக அழைப்பு விடுத்துள்ளது. 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த தேர்தலில்,  இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, அதற்கான உடன்பாடு கையெழுத்தானது. இதனை தொடர்ந்து,  தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை திமுக அழைப்பு விடுத்துள்ளது.