கொரனோ தடுப்பூசி செலுத்தி கொண்டார் நடிகை ராதிகா சரத்குமார்

 


          

            சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். அனைவரும் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.    


                             


              நடிகை ராதிகா சரத்குமாரும் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை  போட்டுக் கொண்டார்.


இதுகுறித்து புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் ராதிகா கூறுகையில் நான் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் உங்களையும் உங்களின் அன்பானவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுங்கள் என ராதிகா தெரிவித்துள்ளார்.