இன்று ஒரு தகவல்


தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் குறித்து நம்மில் பலருக்கு தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.

இளநீருக்கும், தேங்காய் தண்ணீருக்கும் வித்தியாசம் உண்டு.. நாம் இப்போ பார்க்கப்போவது இளநீர் அல்ல தேங்காய் தண்ணீர். 

தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம். 

மேலும் தேங்காய் தண்ணீர் மிகவும் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் பானங்களுள் ஒன்று. நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்பபு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும். 

நமது வீடுகளில் அனைவருமே சமையலின் போது தேங்காய் பயன்படுத்துவதுண்டு. 

இந்த தேங்காயை சமையலுக்காக உடைக்கும், அந்த தேங்காய் தண்ணீருக்கு நமது வீடுகளில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே குடிப்பதற்காக போட்டி போடுவதுண்டு. 

இந்த தேங்காய் தண்ணீரை நாம் விரும்பி குடித்தாலும், இந்த தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் குறித்து நம்மில் பலருக்கு தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.

நோய் எதிர்ப்பு சக்தி

நம்மில் பலருக்கும் உடலில் நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி தான். 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது, பல விதமான நோய்கள் ஏற்படுகிறது. 

எனவே தேங்காய் தண்ணீரை குடிப்பதன் மூலம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்தும் வைரஸையும் அளிக்கிறது.

தைராயிடு

தைராயிடு பிரச்சனை உள்ளவர்களுக்கு, தேங்காய் தண்ணீர் ஒரு சிறந்த மருந்தாகும். இந்த பிரச்சினை உள்ளவர்கள் தேங்காய் தண்ணீரை பருகி வந்தால், உடலில் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராயிடு சுரப்பிகள் சீராக இயங்கவும் உதவுகிறது.

சிறுநீரக பிரச்னை

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை குடித்து வந்தால், சிறுநீரகம் சம்மந்தமான நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கப்படுவதுடன், உடலில் உள்ள டாக்சீன்களை வெளியேற்றி, சிறுநீரக கற்களை கரைக்கும் ஆற்றலும் கொண்டுள்ளது

                       


.

செரிமானம்

செரிமானம் பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை அடிக்கடி குடித்து வந்தால் செரிமான பிரச்னை நீங்குவதோடு, இதில் உள்ள நார்ச்சத்து உடல் அஆரோக்கியதையும் மேம்மடுத்துகிறது.

உடல் எடை

உடல் பருமனை குறைக்க வேண்டும் என விரும்புபவர்கள், அடிக்கடி தேங்காய் தண்ணீரை குடிக்கலாம். இதனை குடிப்பதன் மூலம், பசி கட்டுப்படும். இந்த தண்ணீரை அதிகமாக குடிப்பதால், கொழுப்பு உடலில் சேராது.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும். 

தலைவலி இரவில் அதிகமாக மது அருந்திவிட்டு, மறுநாள் காலையில் எழும் போது கடுமையான தலைவலியை உணரும் போது, தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, ஆல்கஹால் மூலம் உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, ஹேங்ஓவர் பிரச்சனை நீங்கும். 

நீர்ச்சத்து அதிகமாகும் தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும். கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். . 

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் பயணம் தொடரும்.

நன்றி. 

மோகனா செல்வராஜ்