திமுக வேட்பாளர்கள் நேர்காணல்

 


இன்று காலை முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இன்று காலை முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெறவுள்ளது. 

இந்த நேர்காணலில், காலையில், நெல்லை, ராமாநாதபுரம், தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட வேட்பாளர்களிடம் நேர்காணல் நடைபெறவுள்ளது. 

பின் பிற்பகலில், திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மாவட்ட வேட்பாளர்களிடம் நேர்காணல் நடைபெறவுள்ளது