தங்க பேனாவை பரிசளித்த நிர்வாகி.

 


சீட் கிடைத்தாலும், கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தளபதி மு.க.ஸ்டாலினை நேரில் பார்த்து பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது

திமுகவில் விருப்பமனு அளித்தவர்களுக்கு 5 நாட்களாக நேர்காணல் நடைபெற்று வருகிறது. 

இந்த நேர்காணலின் மூலம் ஸ்டாலின் உட்பட மூத்த தலைவர்களை நேரில் சந்திப்பதற்காகவும் சிலர் ரூ.25,000 பணம் செலுத்தி நேர்காணலுக்கு சென்று வந்தனர். 

அந்த வகையில், மதுரை மத்திய தொகுதிக்கு மதுரை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் சையதுஜி என்பவர் விருப்ப மனு  அளித்துள்ளார்.

இதனையடுத்து, நேர்காணலின்போது மு.க.ஸ்டாலினுக்கு சையதுஜி தங்கப் பேனா ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இதை பார்த்த ஸ்டாலின் இது என்ன? என்று ஆச்சரியமாக கேட்க, நீங்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், முதல் கையெழுத்து இந்த தங்க பேனாவால் தான் போட வேண்டும் என்று கூறியுள்ளார். 

இந்த சம்பவத்தை அங்கிருந்த மூத்த நிர்வாகிகள் அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.

மேலும், இதுகுறித்து சையதுஜி அவர்கள் கூறுகையில், திமுக ஆட்சிக்கு வருவது உறுதி. 

சீட் கிடைத்தாலும், கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தளபதி மு.க.ஸ்டாலினை நேரில் பார்த்து பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.